ஜீவகாருண்யம்

வள்ளலார் அன்பு வழியில் ஆன்மீகத்தை அடையலாம் என உறுதியாக நம்பினார். ஆகவே மனிதர்களிடத்து மட்டுமன்றி தாவரங்கள், புழு, பூச்சிகள் மற்றும் விலங்குகள், பறவைகள் போன்ற அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தினார். இதனையே “ஜீவகாருண்யம்” என்று அழைக்கிறோம்.
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ எனக் கூறிய வள்ளலார், உயிர்களிடத்து எவ்வளவு அன்பு கொண்டிருந்தார் என்பதை அரியலாம். மூடப்பழக்கங்களையும், சமய சடங்குகளையும் எதிர்த்த வள்ளலார் உணவுக்காக விலங்குகள் கொல்லப்படுவதை வன்மையாக கண்டித்தார். சைவ உணவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.