திருவருட்பா

மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்தை அடைவதற்கான வழி என்பது வள்ளலாரின் போதனைகளில் மிக முக்கியமானதாகும். கடவுள், ‘கருணை’ மற்றும் அறிவு வடிவமாகத் திகழ்கிறார். ஆகவே கடவுளை அடையும் வழி உயிர்களிடத்து காட்டும் கருணையும், இரக்கமும் ஆகும் என்று குறிப்பிட்டார்.
‘தியானம்’ செய்வதே வழிபாடு என்று கருதினார். 1870-ஆம் ஆண்டு சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு வழிபாட்டுக் கூட்டங்கள் மத வேறுபாடின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்தினார். இவரது பக்திப் பாடல்கள் தொகுக்கப்பட்டு, அத்தொகுப்பு ‘திருவருட்பா’ என்றழைக்கப்படுகிறது.